Sunday, October 11, 2015

பீட்ரூட் பொரியல் / Beetroot Poriyal


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பீட்ரூட் - 150 கிராம் 
  2. பாசிப்பருப்பு - 2 மேஜைக்கரண்டி 
  3. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி 
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. சின்ன வெங்காயம் - 10
  4. பச்சை மிளகாய் - 2
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
  2. பீட்ரூட்டை நன்றாக கழுவி தோல் சீவி துருவியில் வைத்து துருவிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமானதும் துருவி வைத்துள்ள பீட்ரூட், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகும் வரை நன்றாக கிளறி விடவும்.
  5. நன்கு வெந்ததும் அவித்து வைத்துள்ள பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் இரண்டையும் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான பீட்ரூட் பொரியல் ரெடி.

12 comments:

  1. பீட்ரூட் பொரியல் படமே அழகு புதுக்கோட்டை போகவில்லையா...? சகோ

    ReplyDelete
    Replies
    1. உடன் வருகைக்கு நன்றி சகோ.

      Delete
  2. பீட்ரூட் பொரியல் சுலபமாக செய்யும்படியான அருமையான குறிப்பு சாரதா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.

      Delete
  3. வணக்கம்
    செய்முறை விளக்கத்துடன் அசத்தி விட்டீர்கள் பாராட்டுக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ரூபன்.

      Delete
  4. அம்மா நான் பாசிப் பருப்பு சேர்க்காமல் கடலை பருப்பு சேர்த்து செய்வேன். இங்கே யாருக்கும் துருவினால் பிடிக்காது . கட் பண்ணிதான் செய்வேன். பகிர்வுக்கு நன்றிமா.

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி அபிநயா. எங்களுக்கு துருவி செய்தால் தான் பிடிக்கும்.

    ReplyDelete
  6. வெங்காயம், பாசிப்பருப்பு இல்லாமல் செய்வோம்! இது புது மாதிரியாக இருக்கிறது! நன்றி!

    ReplyDelete
  7. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  8. நேற்று எங்கள் கேடரர் பீட்ரூட் பொரியல்தான் கொடுத்தார்!
    விளக்கம் நன்று

    ReplyDelete
  9. பீட்ரூட் பொரியல் பார்க்க சூப்பர்.இங்கு இப்போ மார்க்கெட்டில் கிடைக்கிறது .வாங்கி செய்துபார்க்கிறேன்.நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...