Friday, May 20, 2016

பாசிப்பயறு இனிப்பு சுண்டல் / Green Gram Sweet Sundal


தேவையான பொருள்கள் -
  1. பாசிப்பயறு - 100 கிராம் 
  2. அச்சு வெல்லம் - 50 கிராம் 
  3. ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி 
  4. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  5. உப்பு - 1 சிட்டிகை 
செய்முறை-
  1. பாசிப்பயறை நன்றாக கழுவி விட்டு பயறு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊறிய பிறகு அடுப்பை மிதமான சூட்டில் 15 நிமிடங்கள் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
  3. வெந்த பிறகு அதிலுள்ள தண்ணீரை வடித்து தனியே வைக்கவும்.
  4. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அச்சு வெல்லத்துடன் பாசிப்பயறு வேக வைத்த தண்ணீர் (50 மில்லி) சேர்த்து அடுப்பில் வைக்கவும். அச்சுவெல்லம் கரைந்தவுடன் வடிகட்டி வைக்கவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரைப் பாகை ஊற்றி கொதிக்க விடவும்.
  6. கொதிக்க ஆரம்பித்ததும் அவித்து வைத்துள்ள பாசிப்பயறு, உப்பு இரண்டயும் சேர்க்கவும்.
  7. பாகு கெட்டியாகி வரும் போது ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான பாசிப்பயறு இனிப்பு சுண்டல் ரெடி.


17 comments:

  1. செய்முறை விளக்கம் தந்தமைக்கு நன்றி அம்மா
    வீட்டில் அம்மாவிடம் சொல்லி சமைத்து கேட்கிறேன்....

    ReplyDelete
  2. அம்மாவை செய்ய சொல்லி சாப்பிடுங்கள் அஜய். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. வெகு நாள் தவணை இந்த சுண்டல்..சீக்கிரம் செய்துபார்க்கிறேன்! :)

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகை கண்டு மகிழ்ச்சி மகி. செய்து பாருங்கள்.

      Delete
  4. இதிலே இனிப்பு சுண்டல் இப்போதான் கேள்வி படுகிறேன்.. ஒரு நாள் ட்ரை பண்றேன் மா..

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக ட்ரை பண்ணு அபி.

      Delete
  5. வெகுநாட்களுக்குப் பிறகு சுண்டலை ரசித்தேன், ருசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ருசித்தமைக்கு நன்றி சார்.

      Delete
  6. பாசிப்பயறு சுண்டல் ஸூப்பர்

    ReplyDelete
  7. இனிப்பு சுண்டல் இதுவரை கேள்விப்பட்டது இல்லை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  8. சத்தான இனிப்பு சுண்டல்...சூப்பர் சகோ. இதன் மணமே நன்றாக இருக்கும்...

    ReplyDelete
  9. கருத்துக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  10. Seymurai arumai Amma...

    Laptop repair......adhan tamilil padhivida mudiyavillai.

    ReplyDelete
  11. 5.அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரைப் பாகை ஊற்றி கொதிக்க விடவும்.

    CORRECTION : அடுப்பில் கடாயை வைத்து 'வெல்ல பாகு' ஊற்றி கொதிக்க விடவும்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...