தீபாவளி ஸ்பெஷல் !!!

Friday, October 6, 2017

மணியாச்சி முறுக்கு / Maniyachi Murukuதேவையான பொருள்கள் -
 1. இட்லி அரிசி - 1/2 கப் ( 100 கிராம் )
 2. பச்சரிசி - 1/2 கப் ( 100 கிராம் )
 3. கடலைப்பருப்பு - 3/4 கப் ( 150 கிராம் )
 4. பாசிப்பருப்பு - 1/4 கப் ( 50 கிராம் )
 5. நெய் - 1 மேஜைக்கரண்டி 
 6. உப்பு - தேவையான அளவு 
 7. சுடுவதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை -
 1. இட்லி அரிசி, பச்சரிசி இரண்டையும் ஒன்றாக கலந்து நன்றாக கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு அரிசியுடன் உப்பு சேர்த்து கிரைண்டரில் அரைக்கவும். நடுவில் தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
    
 2. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து  கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் தனித்தனியாக லேசாக வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
 3. ஆறிய பிறகு மிக்சியில் திரித்துக்கொள்ளவும்.
 4. அரைத்த மாவுடன் திரித்து வைத்துள்ள பருப்பு மாவு, நெய் இரண்டையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
 5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தேவையான அளவு மாவை எடுத்து முறுக்கு அச்சில் போட்டு முறுக்குகளாக பிழியவும். இரண்டு நிமிடங்கள் கழித்து முறுக்குகளை திருப்பி போடவும். 
 6. எண்ணெய் நுரைத்து வருவது  குறைந்தவுடன் அல்லது இரண்டு புறமும் பொன்னிறம் ஆனவுடன் ஒரு கம்பி கொண்டு முறுக்குகளை எடுத்து வடிதட்டில் போட்டு வைக்கவும். 
 7. எண்ணெய் நன்றாக வடிந்தவுடன் பரிமாறவும். சுவையான மணியாச்சி முறுக்கு ரெடி.

Thursday, September 28, 2017

தக்காளி கொத்சு / Tomato Gotsuபரிமாறும் அளவு - 4 நபருக்கு

தேவையான பொருள்கள் -
 1. நன்கு பழுத்த தக்காளி - 6
 2. முந்திரிபருப்பு - 10
 3. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
 4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
 5. உப்பு - தேவையான அளவு 
தேங்காய் பால் எடுக்க -
 1. தேங்காய் துருவல் - 1/2 கப் 
தாளிக்க -
 1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
 2. கடுகு - 1 தேக்கரண்டி 
 3. பெரிய வெங்காயம் - 1
 4. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
 5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
 1. பெரிய வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும். முந்திரிப்பருப்பை மிக்சியில் பொடி பண்ணிக்கொள்ளவும். தேங்காய் துருவலை மிக்சியில் அரைத்து அரை கப் அளவுக்கு தேங்காய் பால் எடுத்துக்கொள்ளவும்.
 2. ஒரு பாத்திரத்தில் தக்காளிப்பழங்கள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அடுப்பை அணைத்து 5 நிமிடம் வரை மூடி வைக்கவும்.
 3. 5 நிமிடம் ஆனதும் தண்ணீரை வடித்து விட்டு தக்களிப்பழங்களை குளிர்ந்த நீரில் சிறிது நேரம் போடவும். பிறகு தக்காளியை தோலுரித்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்..
 4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 5. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
 6. பிறகு  அதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி, மற்றும் உப்பு  சேர்த்து 10 நிமிடம் வரை கொதிக்க விடவும். பிறகு அதனுடன் தேங்காய் பால் சேர்க்கவும்.இறுதியில் முந்திரிப்பருப்பு பொடி சேர்த்து கொத்சு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.
 7.  சுவையான தக்காளி கொத்சு ரெடி. இட்லி, தோசை, பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Saturday, September 23, 2017

கெட்டித்தயிர் / Thick Curd


தேவையான பொருள்கள் -
 1. பால் - 1/2 லிட்டர் 
 2. தயிர் - 1 மேஜைக்கரண்டி 
 3. சீனி - 1 தேக்கரண்டி 
செய்முறை -
 1. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடு பண்ணவும். பால் பொங்கி வரும் போது அடுப்பை சிம்மில்  வைத்து  5 நிமிடம்.கழித்து அணைக்கவும்.
 2. பால் லேசான சூட்டில் இருக்கும் போது ஒரு மேஜைக்கரண்டி தயிரை ஊற்றி நன்றாக கலக்கி விடவும். பிறகு ஒரு தேக்கரண்டி சீனி சேர்த்து நன்றாக கலக்கி 8 மணி நேரம் புளிக்க விடவும்.
 3. 8 மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் தயிர் கெட்டியாக உறைந்து இருக்கும். கெட்டித்தயிர் ரெடி.

Thursday, September 14, 2017

இட்லி போண்டா / Idly Bondaதேவையான பொருள்கள் -
 1. இட்லி - 3
 2. கடலைமாவு - 2 மேஜைக்கரண்டி 
 3. பெரிய வெங்காயம் - 1
 4. பச்சை மிளகாய் - 1
 5. கறிவேப்பிலை - சிறிது 
 6. உப்பு - சிறிது 
 7. தண்ணீர் - 2 மேஜைக்கரண்டி 
 8. பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை -
 1. இட்லிகளை  உதிர்த்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
 2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உதிர்த்து வைத்துள்ள இட்லி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கடலைமாவு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அதனுடன் இரண்டு மேஜைக்கரண்டி தண்ணீரும் சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
 3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு உருண்டைகளை போடவும்.
 4. ஒரு புறம்  வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் நன்கு வெந்ததும் எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும். மீதமுள்ள எல்லா உருண்டைகளையும் இதே முறையில் சுட்டு எடுக்கவும். சுவையான இட்லி போண்டா ரெடி.
குறிப்பு -
 1. மீந்து போன இட்லியிலும் இந்த முறையில் போண்டா செய்யலாம். மூன்று இட்லிக்கு 12 போண்டாக்கள் வரை வரும்.

Tuesday, August 1, 2017

லெமன் சேவை / Lemon Sevai


தேவையான பொருள்கள் -
 1. இடியப்பம் - 4
 2. லெமன் சாறு - 3 மேஜைக்கரண்டி 
 3. உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க -
 1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
 2. மிளகாய் வத்தல் - 2
 3. பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி 
 4. மஞ்சள்தூள் - 1/2 
 5. கடுகு - 1 தேக்கரண்டி 
 6. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி 
 7. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
 1. இடியாப்பத்தை உதிர்த்து வைத்துக்கொள்ளவும். 
 2. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றவும். பிறகு கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கடலைப்பருப்பு, மிளகாய்வத்தல், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்க்கவும்.
 3. பிறகு உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்தை சேர்த்து நன்றாக கிளறி இறுதியில் லெமன் சாறு சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும். சுவையான லெமன் சேவை ரெடி.

Friday, July 14, 2017

வெங்காய கிரேவி / Onion Gravy


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
 1. வெங்காயம் - 3
 2. தக்காளி - 1
 3. பச்சை மிளகாய் - 2
 4. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
 5. மல்லித்தழை - சிறிது 
 6. கடலைமாவு - 1 மேஜைக்கரண்டி 
 7. கறிமசாலா தூள் - 1 தேக்கரண்டி 
 8. உப்பு - தேவையான அளவு

தாளிக்க -
 1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
 2. பட்டை - 1 இன்ச் அளவு 
 3. கிராம்பு - 2
செய்முறை -
 1. வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
 2. கடலைமாவை ஒரு மேஜைக்கரண்டி  தண்ணீர் ஊற்றி கரைத்து  வைத்துக்கொள்ளவும்.
 3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு  சேர்த்து  வதக்கவும்.
 4. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி, கறிமசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
 5. தக்காளி நன்கு வதங்கியதும் அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வரை வேக விடவும்.
 6. நன்கு வெந்ததும் கரைத்து வைத்திருக்கும் கடலைமாவை சேர்க்கவும். கிரேவி கெட்டியானதும்  மல்லித்தழை சேர்த்து  அடுப்பை அணைக்கவும். சுவையான வெங்காய கிரேவி ரெடி. பூரி, சப்பாத்தியுடன் பரிமாறவும்.

Tuesday, July 4, 2017

மசாலா சுண்டல் / Masala Sundal


தேவையான பொருள்கள் -
 1. கொண்டைக்கடலை - 1/2 கப் 
 2. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி 
 3. உப்பு - தேவையான அளவு 
வறுத்து பொடிக்க -
 1. மிளகாய் வத்தல் - 2
 2. கொத்தமல்லி - 1 மேஜைக்கரண்டி 
 3. கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி 
 4. சோம்பு - 1 தேக்கரண்டி 
தாளிக்க -
 1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
 2. கடுகு - 1 தேக்கரண்டி 
 3. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
 1. கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு குக்கரில் 4 விசில் வரை வைத்து வேக வைத்து தண்ணீரை வடித்து விடவும்.
 2. அடுப்பில் கடாயை வைத்து மிளகாய் வத்தல், கொத்தமல்லி, கடலைப்பருப்பு, சோம்பு எல்லாவற்றையும் போட்டு லேசாக வறுத்து சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பிறகு மிக்சியில் திரிக்கவும்.
 3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்க்கவும்.
 4. பிறகு அதனுடன் அவித்து வைத்துள்ள கொண்டைக்கடலை, மற்றும் உப்பு சேர்த்து கிளறி அதனுடன் சுண்டல் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்.
 5. இறுதியில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான மசாலா சுண்டல் ரெடி. காபி, டீயுடன் பரிமாறவும்.

Tuesday, June 27, 2017

காளான் பிரியாணி / Mushroom Biryani


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
 1. பாஸ்மதி அரிசி - 1 கப் 
 2. காளான் - 200 கிராம் 
 3. தக்காளி - 1
 4. தயிர் - 2 மேஜைக்கரண்டி 
 5. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
 6. மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி 
 7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
 8. பிரியாணி மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி 
 9. உப்பு - தேவையான அளவு 
அரைக்க -
 1. பட்டை - ஒரு இன்ச் அளவு 
 2. கிராம்பு - 3
 3. பச்சை மிளகாய் - 1
 4. இஞ்சி - சிறிய துண்டு 
 5. பூண்டு பற்கள் - 15
 6. மல்லித்தழை - சிறிது 
 7. புதினா - சிறிது
தேங்காய் பால் எடுக்க -
 1. தேங்காய் துருவல் - 1/2 கப் 
தாளிக்க -
 1. நெய் - 2 மேஜைக்கரண்டி 
 2. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
 3. பட்டை - 1 இன்ச் அளவு 
 4. கிராம்பு - 2
 5. பிரிஞ்சி இலை - 1
 6. பெரிய வெங்காயம் - 1
செய்முறை -
 1. பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வடித்து வைத்துக்கொள்ளவும். காளானை நன்கு கழுவி சுத்தப்படுத்தி கொள்ளவும்.
 2. தேங்காய் துருவலை மிக்சியில் அரைத்து 2 கப் அளவுக்கு தேங்காய் பால் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 3. காளான், வெங்காயம்,தக்காளி மூன்றையும் வெட்டி வைக்கவும்.
 4. பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு பற்கள், மல்லித்தழை, புதினா எல்லாவற்றையும் மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். 
 5. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் காளானுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், பிரியாணி மசாலா தூள், தயிர் அரைத்து வைத்துள்ள கலவை எல்லாவற்றையும் கலந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
 6. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போடவும். 
 7. பட்டை பொன்னிறமானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
 8. தக்காளி நன்கு வதங்கியதும் ஊற வைத்துள்ள காளானை சேர்த்து நன்றாக கிளறி 2 கப் தேங்காய் பாலை ஊற்றவும். 
 9. தேங்காய் பால் கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசி, மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி அடுப்பை சிம்மில் வைத்து மூடவும்.
 10. 5 நிமிடம் கழித்து ஒரு தடவை லேசாக கிளறி விடவும்.  அரிசி நன்கு வெந்ததும் அடுப்பை அணைக்கவும். சுவையான காளான் பிரியாணி ரெடி.

Related Posts Plugin for WordPress, Blogger...