Monday, May 1, 2017

பொட்டுக்கடலை சட்னி / பொரி கடலை சட்னி / Fried Gram Chutney


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பொட்டுக்கடலை - 1/2 கப் 
  2. தேங்காய் துருவல் - 1/2 கப் 
  3. மிளகாய் வத்தல் - 2
  4. பெரிய வெங்காயம் - 1
  5. தக்காளி - 1
  6. இஞ்சி - ஒரு சிறிய துண்டு 
  7. பூண்டுப்பல் - 2 
  8. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கி வைக்கவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் வெட்டி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். 
  3. தக்காளி வதங்கியதும் பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், மிளகாய் வத்தல் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. நன்கு வதங்கியதும் சிறிது நேரம் ஆறவிடவும். ஆறிய பிறகு உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான பொட்டுக்கடலை சட்னி ரெடி.

7 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...